

சேலம் மாவட்டம் சங்ககிரி சிக்கணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் காளியப்பன் (60), இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்டுமாதம் 6-ம் தேதி கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் காளியப்பனை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடை பெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்து நேற்று (13-ம் தேதி) தீர்ப்பு வழங்கப்பட்டது. சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்யமுன்ற காளியப்பனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25,000 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.