

தேனி மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளிதரன் கூறியதாவது: குழந்தைத் திருமணத்தால் சிறுமிகள் உடல் நலம் பாதிக்கப் படும். இது தொடர்பாக தேனி மாவட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தொடர் கண்காணிப்பால் மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் 145 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. குழந்தைத் திருமணம் நடைபெறுவது தெரிந்தால் 1098, 04546- 254368, 89031 84098 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.