டால்மியாபுரம் கிளை நூலகத்தில் சுதந்திர தின புத்தகக் கண்காட்சி  :

டால்மியாபுரம் கிளை நூலகத்தில் சுதந்திர தின புத்தகக் கண்காட்சி :

Published on

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி, திருச்சி டால்மியாபுரம் கிளை நூலக வளாகத்தில் புத்தகக் கண்காட்சி நேற்று நடைபெற்றது. கிளை நூலகம் மற்றும் நூலக வாசகர் வட்டம் ஆகியன இணைந்து நடத்திய இந்த புத்தகக் கண்காட்சியை டால்மியாபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் வெ.சுந்தரராஜன் தொடங்கிவைத்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெ.துரைராஜ், டால்மியா மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் கி.தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவர்கள் 3 பேரும் தலா ரூ.1,000 நன்கொடை அளித்து நூலகப் புரவலர்களாக இணைந்தனர்.

டால்மியா மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் த.ரவிக்குமார், வாசகர் வட்ட உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். புத்தகக் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை வாசகர் வட்ட துணைத் தலைவர் த.செல்வராஜ் செய்திருந்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in