காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இருதய நோய் பரிசோதனை முகாமை, ஆட்சியர் மா.ஆர்த்தி தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.
Regional02
காஞ்சியில் அரசு ஊழியருக்கான இருதய பரிசோதனை முகாம் :
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற அரசு ஊழியர்களுக்கான இருதய பரிசோதனை முகாமை ஆட்சியர் மா.ஆர்த்தி தொடங்கி வைத்தார். இதில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு உடல் எடை, உயரம், ரத்த அழுத்த அளவு, சர்க்கரை அளவு, இசிஜி முதலிய பரிசோதனைகள் செய்யப்பட்டன.
‘குளோபல் ஹெல்த் சிட்டி’ சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்நிறுவனத்தின் தொடர்பு அலுவலர் பாஸ்கர் ரெட்டி, இருதய சிகிச்சை நிபுணர் கார்த்திக் ஆஞ்சநேயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
