பழமை மாறாமல் புதுபொலிவு பெற்றது - அரண்மனை சிறுவயல் மருதுபாண்டியர் கோட்டை :

கல்லல் அருகே அரண்மனை சிறுவயலில் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட மருதுபாண்டியர் கோட்டை
கல்லல் அருகே அரண்மனை சிறுவயலில் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட மருதுபாண்டியர் கோட்டை
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே அரண்மனை சிறுவயல் மருதுபாண்டியர் கோட்டை பழமை மாறாமல் புதுப்பொலிவு பெற்றது.

கல்லல் அருகே அரண் மனை சிறுவயலில் பழங்காலக் கோட்டை உள்ளது. இக்கோட்டை சிவகங்கையை ஆண்ட சசிவர்ணத்தேவர் வம்சத்தவரால் கட்டப்பட்டது.

கிபி 18-ம் நூற்றாண்டின் இறுதியில் மருது சகோதரர்கள் படையுடன் இந்தக் கோட்டையில் தங்கி ஆங்கிலேயருடன் கடும் போர் புரிந்துள்ளனர். இங்கு நான்கு நுழை வாயில்களுடன் 3 கொத்தள அறைகள் உள்ளன. இதனை மருது பாண்டியர் கோட்டை என்றே அழைக்கின்றனர்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கோட்டையை தொல்லியல்துறை பாதுகாத்து வருகிறது. சிதிலமடைந்த இந்தக் கோட்டை ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் ரூ.60.31 லட்சத்தில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது. கட்டுமானப்பணியில் சிமென்ட் பயன்படுத்தாமல் சுண்ணாம்பு, மணல், கடுக்காய், கருப்பட்டி கலவையை பயன்படுத்தி உள்ளனர்.

தற்போது பணிகள் முடிந்து புதுப்பொலிவுடன் காணப்படுகிறது. மேலும் வளாகத்தில் பழமையான தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள் ளன. இதனை வரலாற்று ஆர்வலர்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in