கள்ளக்குறிச்சி அருகே - மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் சிறை :

கள்ளக்குறிச்சி அருகே -  மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் சிறை :
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி அருகே மழைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கப்பல் துரை (47). இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த கலியன் மகள் சுசிலா என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. மனைவி யின் மீது சந்தேகமடைந்த கப்பல்துரை கடந்த 9.5.2015-ல் சுசிலாவை தாக்கினார். இதில் படுகாயமடைந்த சுசிலா உயிரிழந்தார்.

இது குறித்து தியாகதுருகம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கு விழுப்புரம் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி நேற்று கப்பல்துரைக்கு ஆயுள்தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இளைஞரை கொன்றவருக்கு

ஆயுள் சிறை

திருக்கோவிலூர் அருகே பெண்ணைவளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் சுகுமார் (28). விவசாயியான இவரை அதே கிராமத்தைச் சேர்ந்த கூத்தான் என்பவர் கடந்த 13.12.2016-ல் முன்விரோதத்தில் தாக்கினார்.

இதில் படுகாயமடைந்த சுகுமார்புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இதுகுறித்து திருவெண் ணைநல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு விழுப்புரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி செங்கமல செல்வன் நேற்று கூத் தானுக்கு ஆயுள்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in