

தூத்துக்குடி ரயில் நிலையம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ரயில் பெட்டிகளை பயன்பாட்டுக்கு மீண்டும் கொண்டுவர வேண்டும். ரயில் நிலையங்களில் மின் தூக்கி, நகரும் படிக்கட்டுகளை உடனே இயக்க வேண்டும். புதுச்சேரி, சண்டிகர் யூனியன் பிரதேசங்களில் வழங்குவதை போல மாற்றுத் திறனாளிகளுக்கு பெட்ரோலுக்கு மானியம் வழங்க வேண்டும். நடைமேடை கட்டணம் ரூ.50 என்பதை கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.முருகன் தலைமை வகித்தார்.மாவட்ட தலைவர் எம்.மருதபெருமாள், தமிழக மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்க செயலாளர் பி.ஜெயராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கோவில்பட்டி
திருநெல்வேலி
சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் பி.தியாகராஜன், செயலாளர் எஸ்.குமாரசுவாமி, இணைச் செயலாளர் கற்பகம் ஆகியோர் பேசினர்.