இளைஞரின் சடலத்தை பெற மறுத்து போராட்டம் :

இளைஞரின் சடலத்தை பெற மறுத்து போராட்டம் :
Updated on
1 min read

சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் அருண்குமார் (28). பல்லடத்தை அடுத்த சின்னக்கரை லட்சுமி நகரிலுள்ள தனியார் சாய ஆலை மின்மாற்றியில் பழுது ஏற்பட்டுள்ளதா என நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டனர். எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது சடலம், பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இது தொடர்பாக பல்லடம் போலீஸார் வழக்கு பதிந்தனர்.

இந்நிலையில், சடலத்தை பெற மறுத்து அவரது குடும்பத்தினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். திருமணமாகி 2 ஆண்டுகள் மட்டுமே ஆனதால், அவரது கர்ப்பிணி மனைவி சவுந்தர்யா மற்றும் குடும்பத்தின் எதிர்காலம் கருதி உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தினர். தனியார் நிறுவன பிரதிநிதிகள், அவர்களை சமாதானப்படுத்தினர். பல்லடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, குடும்பத்தினரிடம் சடலத்தை ஒப்படைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in