நூறு நாள் வேலை திட்டத்தில் பாரபட்சம் காட்டுவதாக புகார் :

நூறு நாள் வேலை திட்டத்தில் பாரபட்சம் காட்டுவதாக புகார் :
Updated on
1 min read

பல்லடம் ஒன்றியம் மாணிக்காபுரம் ஊராட்சிக்குஉட்பட்ட மாணிக்காபுரம், ராசாக்கவுண்டம்பாளையம், அம்மாபாளையம் உட்பட பல்வேறுகுக்கிராமங்களில் 100 நாள் வேலை திட்டத்தில்பலர் பணிபுரிகின்றனர். சில கிராமங்களில் மட்டும் குறிப்பிட்ட சிலருக்கு 100 நாள் வேலை வழங்குவதாகவும், மற்றவர்களுக்கு 10 முதல் 15 நாட்களுக்கு மட்டுமே வேலை வழங்குவதாக கூறிஅகில இந்திய விவசாயிகள் தொழிலாளர்கள் சங்கத்தின் நிர்வாகி பஞ்சலிங்கம் தலைமையில்,பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 50-க்கும் மேற்பட்ட 100 நாள் வேலை திட்ட பயனாளிகள் திரண்டு முற்றுகையில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in