தபால் நிலையங்களில் ஆதார் சேவை மீண்டும் தொடக்கம் :

தபால் நிலையங்களில்   ஆதார் சேவை மீண்டும் தொடக்கம் :
Updated on
1 min read

கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்டத்திற்குட்பட்ட தபால் நிலையங்களில் ஆதார் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரோனா நோய் தொற்றின் காரணமாக தபால் நிலையங்களில் ஆதார் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது கிருஷ்ணகிரி கோட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி தலைமை அஞ்சலகம் மற்றும் கிருஷ்ணகிரி தொழிற்பேட்டை, பர்கூர், மத்தூர், ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, காவேரிப்பட்டணம், காரிமங்கலம், போச்சம்பள்ளி, நாகரசம்பட்டி, கல்லாவி, எலத்தகிரி, வேப்பனப்பள்ளி, சூளகிரி, ராயக்கோட்டை, ஓசூர், ஓசூர் தொழிற்பேட்டை, மத்திகிரி, தளி, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை ஆகிய துணை அஞ்சலகங்களிலும் ஆதார் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. எனவே, தபால் துறையின் ஆதார் சேவையினை பொதுமக்கள் அனைவரும் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in