

விவசாயிகள் பயனடையும் வகையில் நந்தன் கால்வாய் தூர்வாருதல், கால்வாயின் குறுக்கே அமைந்துள்ள குறுக்கு கட்டுமானங்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட புனரமைப்பு பணிகள் ரூ.26.57 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது.
இப்பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறதா என விழுப்புரம் ஆட்சியர் மோகன் நேற்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது கால்வாய் சீரமைப்பில் மேற்கொள்ள வேண்டிய பணி குறித்து, விவசாயிகளின் கோரிக்கைகளை விரிவாக கேட்டறிந்தார்.
கடந்த 27ம் தேதி நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனுவில், “கடந்த 45 ஆண்டுகளாக பலமுறை நந்தன் கால்வாயை அரசு சீரமைத்தும் முழுமையான பயன்பாட்டிற்கு வரவில்லை. எனவே ஆட்சியர் நேரடியாக கள ஆய்வு செய்திட வேண்டும்” என்று கூறியிருந்தது குறிப்பிடதக்கது.