கும்பகோணம் நிதி நிறுவன பண மோசடி வழக்கில் - காவல் துறையினர் மீதான புகார் குறித்தும் விசாரிக்கப்படும் : மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன் தகவல்

கும்பகோணம் நிதி நிறுவன பண மோசடி வழக்கில் -  காவல் துறையினர் மீதான புகார் குறித்தும் விசாரிக்கப்படும் :  மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன் தகவல்
Updated on
1 min read

தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி அலு வலகத்தில், போலீஸ் துறை சார்ந்த அருங்காட்சியகம் அமைப் பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணியை நேற்று பார்வையிட்ட மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:

கும்பகோணம் நிதி நிறுவனத் தில் பண மோசடி செய்துள்ளதாக அதன் உரிமையாளர்கள் மீது பலர் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக் கின்றன. அது தொடர்பாக விசா ரணை நடத்தி வருகிறோம்.

இதுவரை பதிவான வழக்கின் அடிப்படையில், நிதி நிறுவன அதிபர்கள் உட்பட அந்நிறுவ னத்தைச் சேர்ந்த முக்கியமான நபர்கள் கைது செய்யப்பட்டுள் ளனர். மேலும், நிதி நிறுவன அதிபர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகிறோம். இதுவரை வந்த புகார்களின் அடிப்படையில், ரூ.20 கோடிக்கு மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

நிதி நிறுவன பண மோசடி வழக்கில், போலீஸார் மீது புகார் கள் கூறப்படுவது குறித்து கேட்ட தற்கு, புலன் விசாரணையில் அனைத்தையும் விசாரிப்போம் என்றார்.

தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி பர்வேஷ்குமார், எஸ்.பி ரவளிப் ரியா ஆகியோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in