சீருடை பணியாளர் தேர்வு - கடலூர், விழுப்புரத்தில் 2-ம் கட்ட உடற்திறன் தேர்வில் 711 பேர் தேர்ச்சி :

சீருடை பணியாளர் தேர்வு -  கடலூர், விழுப்புரத்தில் 2-ம் கட்ட உடற்திறன் தேர்வில் 711 பேர் தேர்ச்சி :
Updated on
1 min read

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய 2-ம் நிலை காவலர்களுக்கான உடற்திறன் தேர்வு கடந்த மாதம் 26-ம் தேதி முதல்தமிழகம் முழுவதும் 20 மையங்களில் நடைபெற்று வருகிறது. கடலூரில் நடைபெற்ற எழுத்துத் தேர்வில் ஆண்கள்2,748, பெண்கள் 1,045, திருநங்கை ஒருவர் என தேர்வு பெற்றனர்.

இதில், ஆண்களுக்கு முதற்கட்ட உடற்திறன் தேர்வு முடிந்து 2-ம் கட்ட உடற்திறன் தேர்வுக்கு 551 பேர் அழைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று 542 பேர் மட்டுமே பங்கேற்றனர். இதில் நீளம் அல்லது உயரம் தாண்டுதல், 100 அல்லது 400 மீட்டர் ஓட்டம், கயிறு ஏறுதல் ஆகிய உடற்திறன் தேர்வில் 465 பேர் தேர்ச்சி பெற்றனர்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்தோருக்கான எழுத்து தேர்வில் 2,256 ஆண்கள், 700 பெண்கள் என மொத்தம்2,956 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கானசான்றிதழ் சரிபார்ப்பு,உடற்கூறுஅளத்தல், உடற்தகுதிதேர்வு மற்றும் உடற்திறன்தேர்வு விழுப்புரம் காகுப்பத்தில் உள்ளஆயுதப்படை மைதானத் தில் நடைபெற்று வருகிறது.

பெண் விண்ணப்பதாரர் களுக்கு உடற்தகுதி தேர்வுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. 417 பெண் விண்ணப்பதார்களில் நேற்று3 பேர் வருகை தரவில்லை. உடற்திறன் தேர்வின் முடிவில் 246 பேர் தேர்ச்சி பெற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in