

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 36 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 44,137 பேருக்கு தொற்று ஏற்பட்டு, நேற்று 31பேர் உட்பட 43,439 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 357 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை
341பேர் உயிரிழந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் நேற்று 87 நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தொற்று பாதிப்பு 61,074 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 532 பேர் உயிரிழந்துள்ளனர்.