பணி நிரந்தரம், ஊதிய உயர்வு வலியுறுத்தி மகளிர் சுகாதார களப்பணியாளர்கள் மனு :

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு வலியுறுத்தி  மகளிர் சுகாதார களப்பணியாளர்கள் மனு :
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றி வரும் மகளிர் சுகாதார களப்பணியாளர்கள் பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வை வலியுறுத்தி நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதுதொடர்பாக அம்மனுவில் கூறியிருப்பதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு தேசிய நலவாழ்வு இயக்கம் சார்பில், துணை சுகாதார நிலைய அளவில் மக்கள் தொகை அடிப்படையிலான தொற்றா நோய் கண்டறிதல் மற்றும் தமிழக முதல்வரால் கடந்த 5-ம் தேதி தொடங்கி வைக்கப்பட்ட மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில், மாதம் ரூ.3,500 என்கிற ஊதியத்தில் தற்காலிக பணியாளர்களாக 63 பேர் பணிபுரிந்து வருகிறோம்.

குறைவான ஊதியத்தில் எங்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய மிகக் கடினமாக உள்ளது. எனவே எங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, எங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பணி நிரந்தரம் செய்து ஊதிய உயர்வு வழங்க வேண்டும். கடந்த 5-ம் தேதி முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சரிடமும் கோரிக்கை மனு வழங்கி உள்ளோம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in