திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் : சிறப்பு கைத்தறி கண்காட்சி தொடக்கம் :

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில்  : சிறப்பு கைத்தறி கண்காட்சி தொடக்கம் :
Updated on
1 min read

தேசிய கைத்தறி தினத்தையொட்டி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் திருப்பூர் ஆட்சியர் வளாகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சியை ஆட்சியர் சு.வினீத் நேற்று தொடங்கி வைத்தார்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்ட மென்பட்டு சேலைகள், கோரா காட்டன் சேலைகள், கோரா சேலைகள், காட்டன் சேலைகள், பெட்ஷீட்கள்,துண்டு வகைகள், மிதியடிகள், பட்டு அங்கவஸ்திரங்கள் என 25 லட்சம் மதிப்பில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 25-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் கலந்துகொண்டுள்ளன. இன்று (ஆக. 8), நாளை (ஆக. 9) காலை 10முதல் மாலை 5 மணி வரை கண்காட்சி நடைபெறுகிறது.

தமிழக அரசால் அனுமதிக்கப்படும் 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. கைத்தறி நெசவாளர்களுக்கு முத்ரா கடன் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்புக்கு கடனுதவியையும், கைத்தறி நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.2.47 லட்சம் மதிப்புக்கு திட்டத் தொகையையும் ஆட்சியர் வழங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், திருப்பூர் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநர் ச.மணிமுத்து உட்பட பலர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in