செங்கல்பட்டு அருகே போலீஸாருக்கு பயந்து - வெடிகுண்டு வீசி தப்ப முயன்ற இரு இளைஞர்கள் கைது :

செங்கல்பட்டு அருகே போலீஸாருக்கு பயந்து -  வெடிகுண்டு வீசி தப்ப முயன்ற  இரு இளைஞர்கள் கைது :
Updated on
1 min read

பாலூர் காவல் நிலைய எல்லைக்குஉட்பட்ட பகுதியில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இளைஞர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் வந்தபோது, போலீஸார் அவர்களை மடக்கினர்.

இதில் பயந்துபோன இளைஞர்கள், தாங்கள் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை, யாரும் இல்லாத இடத்தில் தூக்கி வீசினர். அப்போது பலத்த சப்தத்துடன் குண்டு வெடித்தது. உடனடியாக சுதாரித்துக்கொண்ட போலீஸார், இருவரையும் கைது செய்தனர்.

விசாரணையில், அவர்கள் பாலூர் தெள்ளிமேட்டைச் சேர்ந்ததமிழ்மணி(30) வசந்தராஜா(22) என்பது தெரியவந்தது. தமிழ்மணியின் மனைவிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அன்பு என்பவருக்கும் தகாத நட்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தமிழ்மணி, நண்பர்வசந்தராஜாவுடன் இணைந்து, அன்புவைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். இதற்காக நாட்டுவெடிகுண்டு வாங்கியது விசாரணையில் தெரிய வந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in