Published : 08 Aug 2021 03:18 AM
Last Updated : 08 Aug 2021 03:18 AM
ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெயர் மாற்றத்துக்கு விருதுநகர் இளைஞர் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சிசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கை:
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா என முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பெயரில் நீண்ட காலமாக விருது வழங்கப்பட்டு வந்தது. இந்த விருதின் பெயரை மத்திய அரசு தற்போது தயான்சந்த் விருது என மாற்றியுள்ளது. இது கண்டனத்துக்குரியது.
எனவே, மத்திய அரசு இந்த முடிவை மாற்றி தொடர்ந்து ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT