Published : 06 Aug 2021 03:21 AM
Last Updated : 06 Aug 2021 03:21 AM

ஓசூர், ஊத்தங்கரை அரசு மருத்துவமனைகளில் 15 பேர் தற்காலிகமாக நியமிக்க முடிவு :

ஓசூர் மற்றும் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைகளில் கரோனா நோய் தடுப்பு பணிகளுக்காக ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் நலன் கருதி கரோனா நோய் தடுப்புப் பணிகளுக்காக மருந்தாளுநர்கள், ஆய்வக நுட்புநர்கள், நுண்கதிர் வீச்சாளர் ஆகிய பணியிடங்களுக்கு 15 பேர் ஒப்பந்த அடிப்படையில் 6 மாத காலத்திற்கு தற்காலிகமாக நியமிக்கப்படவுள்ளனர். மாதம் ரூ.12 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும். அதன்படி, ஓசூர் அரசு மருத்துவமனையில் மருந்தாளுநர்கள் 4, ஆய்வக நுட்புநர் 4, நுண்கதிர் வீச்சாளர் 4 பணியிடங்களும், ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் மருந்தாளுநர் 1, ஆய்வக நுட்புநர் 1, நுண்கதிர் வீச்சாளர் 1 ஆகிய பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தினை நேரிலோ, பதிவு அஞ்சல் krishnagiri.jdhs1@gmail.com அல்லது krishnagiri.jdhs@gmail.com மின்னஞ்சல் மூலமாகவோ வரும் 11-ம் தேதி மாலை 4 மணி வரை இணை இயக்குநர் நலப்பணிகள் அலுவலகம், கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம், கிருஷ்ணகிரி என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். வரும் 16-ம் தேதி காலை 10 மணிக்கு இணை இயக்குநர் நலப்பணிகள் அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x