

தமிழக அரசின் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தை திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அமைச்சர்கள் நேற்று தொடங்கி வைத்தனர்.
தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டத்தில் நேற்று தொடங்கிவைத்தார். பின்னர் காணொலிக் காட்சி மூலம் திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் மொண்டிப்பட்டி கிராமத்தில் தொடங்கிவைத்தார். அப்போது, மாநில நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர்.
மேலும், நோயாளிகளின் வீடுகளுக்கு சிறப்பு மருத்துவக் குழுவினர் செல்வதற்கான வாகன இயக்கத்தைக் கொடியசைத்துத் தொடங்கிவைத்ததுடன், நோயாளிகள் சிலருக்கு மருந்துப் பெட்டகத்தையும் அமைச்சர்கள் வழங்கினர்.
நிகழ்ச்சியில் ஆட்சியர் சு.சிவராசு, எம்எல்ஏக்கள் அ.சவுந்தரபாண்டியன், எஸ்.ஸ்டாலின்குமார், எம்.பழனியாண்டி, ந.தியாகராஜன், எஸ்.இனிகோ இருதயராஜ், பி.அப்துல் சமது, ரங்கம் கோட்டாட்சியர் சிந்துஜா, பொது சுகாதாரத் துறை இணை இயக்குநர் சுரேஷ், நலப் பணிகள் இணை இயக்குநர் லட்சுமி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ராம்கணேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில்...
தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்துக்குட்பட்ட பெருமத்தூர் கிராமத்தில், மக்களைத் தேடி மருத்துவம் திட்ட வாகனத்தை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கிவைத்து, பொதுமக்களின் இருப்பிடங்களுக்குச் சென்று மாத்திரை பெட்டகங்களை வழங்கி பேசியபோது, “பெரம்பலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் 26,500 பேர் பயனடைவார்கள்” என்றார்.
இந்நிகழ்ச்சிக்கு, ஆட்சியர் ப. வெங்கடபிரியா, எம்எல்ஏ ம.பிரபாகரன், மாவட்ட ஊராட்சித் தலைவர் சி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இணை இயக்குநர் வினைல், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் எம்.கீதாராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கரூர் மாவட்டத்தில்...
நிகழ்ச்சிக்கு, அரவக்குறிச்சி எம்எல்ஏ ஆர்.இளங்கோ முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சந்தோஷ்குமார், வட்டாட்சியர் பன்னீர்செல்வம், வட்டார மருத்துவ அலுவலர் அருண்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில்...
இதேபோல, ஆலங்குடி அருகே கொத்தமங்கலத்தில் நேற்று மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை மாநில சுற்றுச்சூழல்- காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்து பேசியபோது, ‘‘இத்திட்டத்தின் மூலம் 45 ஆயிரம் பேர் பயன்பெற உள்ளனர்’’ என்றார்.
திருவாரூர் மாவட்டத்தில்...
இந்நிகழ்ச்சிக்கு, ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகித்தார். எம்எல்ஏ பூண்டி கே.கலைவாணன் முன்னிலை வகித்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில்...
நிகழ்ச்சிக்கு, எம்எல்ஏக்கள் பன்னீர்செல்வம், நிவேதா முருகன், ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடர்பான குறும்படம் திரையிடப்பட்டது. நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை துணை இயக்குநர் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நாகை மாவட்டத்தில்....