வேலூரில் : காணொலி வாயிலாக பி.எப் குறைதீர்வு கூட்டம் :

வேலூரில் : காணொலி வாயிலாக பி.எப் குறைதீர்வு கூட்டம் :
Updated on
1 min read

வேலூர் மண்டல வருங்கால வைப்பு நிதி அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், ‘‘வேலூர் மண்டல வருங்கால வைப்பு நிதி (பி.எப்) அலுவலகத்தில் வைப்பு நிதி செலுத்தும் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகத்தை சேர்ந் தோருக்கான குறைதீர்வு கூட்டம் வரும் 10-ம் தேதி காலை 11 மணி முதல் நடைபெறவுள்ளது.

வருங்கால வைப்பு நிதி ஆணையர் மற்றும் இதர அலுவலர்கள் முன்னிலையில் நடைபெறும் கூட்டம் காணொலி வாயிலாக http://meet19.wenbex.com/meet/pr1266655945 என்ற இணைப்பின் வழியாக நடை பெறும். எனவே, குறைகளை வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகம், எஸ்-4, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, பேஸ்-3, சத்துவாச்சாரி, வேலூர்-9 என்ற முகவரிக்கு வரும் 8-ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். மேலும், 0416-2906001/5 என்ற எண்ணில் அல்லது ro.vellore@epfindia.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்’’ என தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in