Published : 05 Aug 2021 03:17 AM
Last Updated : 05 Aug 2021 03:17 AM

இரு தரப்பு மோதலில் மேலும் ஒருவர் கைது :

திருப்பூர்

திருப்பூர் மதுபானக் கூடத்தில் நடந்த மோதலில் 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மதுபானக்கூட உரிமையாளரை நேற்று போலீஸார் கைது செய்தனர்.

திருப்பூர் அனுப்பர்பாளையம் புதூர் 15 வேலம்பாளையம் சாலை 15 முக்கு அருகே டாஸ்மாக் கடையையொட்டி நீதிராஜன்என்பவருக்கு சொந்தமான மதுபானக்கூடம் உள்ளது. கடந்த 2-ம் தேதி சாமுண்டிபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் மது அருந்த மதுபானக் கூடத்துக்கு வந்தது தொடர்பாக இருதரப்பிலும் பிரச்சினை எழுந்தது. இந்நிலையில் நீதிராஜன் அளித்த புகாரின் பேரில் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து எதிர்தரப்பினர் அளித்த புகாரின் பேரில் மதுபானக்கூட உரிமையாளர் நீதிராஜனை அனுப்பர்பாளையம் போலீஸார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.



Sign up to receive our newsletter in your inbox every day!

 
x