புகையிலையை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை : கிருஷ்ணகிரி ஆட்சியர் எச்சரிக்கை

கிருஷ்ணகிரியில் நடந்த நிகழ்ச்சியில் சிறந்த உணவு பொருள்கள் கையாள்பவர்களுக்கான மேற்பார்வையாளர் பயிற்சி சான்றுகளை ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வழங்கினார்.
கிருஷ்ணகிரியில் நடந்த நிகழ்ச்சியில் சிறந்த உணவு பொருள்கள் கையாள்பவர்களுக்கான மேற்பார்வையாளர் பயிற்சி சான்றுகளை ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வழங்கினார்.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில், வணிக சங்க பிரதிநிதிகள், ஓட்டல் சங்க பிரதிநிதிகள், நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பினர், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள், புகையிலை, பான்மசாலா, குட்கா ஒழிப்பு குறித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் சுகாதாரமாகவும், தரமானதாகவும் செயல்பட்டு வரும் உணவகங்களுக்கு ஹைஜின் ஸ்டார்ரேட்டிங் தரச் சான்று ஓசூர் உணவக உரிமையாளர்கள் 8 பேருக்கும், கிருஷ்ணகிரி உணவக உரிமையாளர்கள் 3 பேருக்கும், உணவு பாதுகாப்பு தரச்சான்றும், உணவு பொருள் கையாள்பவர்களுக்கு உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் பயிற்சி சான்றுகள் 10 பேருக்கும் என மொத்தம் 21 பேருக்கு சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது: தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை, குட்கா, பான் மசாலா ஆகிய பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்நிகழ்ச்சியில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் டாக்டர்.கோவிந்தன், மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.வெங்கடேஷ், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்னபாலமுருகன், ஒருங்கிணைந்த குழந்தகள் வளர்ச்சி திட்ட அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in