அடிக்கடி விபத்து: பொதுமக்கள் மறியல் :

அடிக்கடி விபத்து: பொதுமக்கள் மறியல் :
Updated on
1 min read

கரூர் வெங்கக்கல்பட்டி மேம்பாலத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால், உரிய நடவடிக்கைக் எடுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கரூர் ராயனூர் வெள்ளக்கவுண்டன் நகரைச் சேர்ந்தவர் நல்லதம்பி (59). இவர் நேற்று வெங்கக்கல்பட்டி சாலை மேம்பாலம் வழியாக மொபெட்டில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக டிஎன்பிஎல் அலுவலர் சரவணகுமார் என்பவர் வந்த கார் மோதியதில் நல்லதம்பி காயமடைந்தார்.

அந்த இடத்தில் அடிக்கடி விபத்து நடப்பதால், அங்கு வேகத்தடை, சிக்னல் அமைக்கவேண்டும். போக்குவரத்து போலீஸ் நியமிக்கவேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என போலீஸார் உறுதி யளித்ததைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in