

தி.மலை மாவட்டத்தில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு கரோனா விழிப்புணர்வு குறித்த ‘ஆன்லைன்’ விநாடி-வினா போட்டி நாளை (6-ம் தேதி) நடைபெறவுள்ளது.
தமிழ் மற்றும் ஆங்கிலம் வழியில் நடைபெறும் போட்டியில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையும், 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு நடத்தப்படும்.
ஆன்லைன் விநாடி-வினா போட்டி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதில், ஏதேனும் ஒரு அரை மணி நேரத்தை மாணவர்கள் தேர்வு செய்து போட்டியில் பங்கேற்கலாம். இதற்காக https://tiruvannamalai.nic.in என்ற இணையதளத்தில் corona awareness online quiz என்ற இணைப்பில் சென்று பதிவு செய்துகொண்டு பங்கேற்கலாம். மாணவர்களுக்கான உதவி ஆவணங்கள் இணைய தளத்தில் கிடைக்கும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.