

காங்கயம் ஊராட்சி ஒன்றியம் மேலப்பாளையத்தில் தீரன் சின்னமலையின் 216-வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி அவரது உருவப்படத்துக்கு, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் மற்றும் ஆட்சியர் சு.வினீத் உட்பட பலர், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல, திருப்பூர் குமார் நகரில் தீரன் சின்னமலையின் உருவப் படத்துக்கு, கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத்தலைவர் பெஸ்ட் ராமசாமி தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதேபோல, பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலை உருவப் படத்துக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மாலை அணிவித்து, மலர் தூவிஅஞ்சலி செலுத்தினர். கோவில்பாளையம்அடுத்த காளியண்ணன் புதூரில் பாஜக சார்பில்அக்கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.