5 வயது சிறுவன் 23 அடி உயர கயிற்றில் : 34.29 விநாடியில் ஏறி சாதனை :

சிவகங்கை சூரக்குளம் ஆக்ஸ்போர்டு பள்ளியில் வேகமாகக் கயிற்றில் ஏறி சாதனை படைத்த சிறுவன் சாலிவாகனன்.
சிவகங்கை சூரக்குளம் ஆக்ஸ்போர்டு பள்ளியில் வேகமாகக் கயிற்றில் ஏறி சாதனை படைத்த சிறுவன் சாலிவாகனன்.
Updated on
1 min read

சிறுவன் சாலிவாகனன் கயிற்றில் 34.29 விநாடியில் 23 அடி உயரம் ஏறி சாதித்தான். அச்சிறுவனை சிவகங்கை மாவட்ட எஸ்பி செந்தில்குமார், தமிழ்நாடு பாடிபில்டர் அசோசியேஷன் துணைத் தலைவர் பரமசிவம் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.

இதுகுறித்து சிறுவனின் தந்தை வினோத்குமார் கூறியதாவது: எங்கள் குழந்தைகள் யாழரசி, சாலிவாகனன் ஆகியோருக்காக மரத்தில் சேலையால் ஊஞ்சல் கட்டினேன். ஆனால் சாலிவாகனன் ஊஞ்சலில் ஆடாமல் மேலே ஏறுவதிலேயே ஆர்வம் காட்டினான். இதைக் கவனித்த நான் மரத்தில் கயிற்றை கட்டி ஏற வைத்து பயிற்சி அளித்தேன்.

ஏற்கெனவே 60 விநாடியில் 20 அடி உயரத்தை 6 வயது சிறுவன் கடந்ததாக கேள்விப்பட்டேன். ஆனால், எனது மகன் 34.29 விநாடியில் 23 அடி உயரத்தை கடந்தது பெருமையாக உள்ளது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in