ஆண்டிபட்டி- தேனி புதிய அகல பாதையில் இன்று ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் :

ஆண்டிபட்டி- தேனி புதிய அகல பாதையில் இன்று  ரயில் என்ஜின் சோதனை ஓட்டம்  :
Updated on
1 min read

இது தொடர்பாக கோட்ட ரயில்வே அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:

மதுரை -போடிநாயக்கனூர் அகல ரயில் பாதைத் திட்டத்தில் மதுரை-ஆண்டிபட்டி வரை பணி நிறைவு பெற்று, பெங்களூர் தென் சரக முதன்மைப் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்தார். தற்போது ஆண்டிபட்டி- தேனி ரயில் நிலையங்களுக்கு இடையே அகல ரயில் பாதை அமைக்கும் பணியும் நிறைவு பெற்றது. இவ்வழித்தடத்தில் முதன்மை பாதுகாப்பு ஆணையர் விரைவில் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்.

இதனையொட்டி இன்று ( புதன்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ஆண்டிபட்டி - தேனி ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய அகல ரயில் பாதையில் 80 கி.மீ. முதல் 100 கி.மீ. வேகத்தில் ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. அப்போது பொதுமக்கள் அப்பகுதியில் ரயில் பாதையை கடக்கவோ, அருகில் செல்லவோ வேண்டாமென எச்சரிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in