கரோனா பரவுவதை தடுக்க வர்த்தகர்களுடன் திண்டுக்கல் ஆட்சியர் கலந்தாய்வு :

கரோனா பரவுவதை தடுக்க வர்த்தகர்களுடன் திண்டுக்கல் ஆட்சியர் கலந்தாய்வு  :
Updated on
1 min read

திண்டுக்கல் வர்த்தக சங்கத்தில் நடந்த இக்கூட்டத்தில் திண்டுக்கல் வர்த்தகர்கள் சங்கம், திண்டுக்கல் மாவட்ட தொழில் வர்த்தகர்கள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கரோனா பரவல் மூன்றாவது அலையைத் தடுக்க வர்த்தகர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள், கடைகளுக்கு வருபவர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதிப்பது, கிருமி நாசினி வைத்திருப்பது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கச் செய்வது, முகக்கவசம் அணிந்தால் மட்டுமே கடைக்குள் அனுமதிப்பது எனக் கரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வர்த்தகர்களிடம் வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் மருத்துவப் பணிகள் துணை இயக்குநர் பூங்கோதை, மாநகராட்சி நகர்நல அலுவலர் லட்சியவர்ணா மற்றும் வர்த்தகர் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in