

இதன்படி ஆகஸ்ட் மாதத்தில் வெட்டிவேர் காவடி காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் சே.கிருஷ்ணம்மாள் கூறுகையில், காவடியாட்டம் முருக வழிபாட்டுடன் தொடர்புள்ளது. இதன் தோற்றம் சிந்து சமவெளிக் காலத்தில் உருவானதாகச் சான்று கிடைத்துள்ளது. நீளமான தடியின் இரண்டு முனைகளிலும் பால், தேன், இளநீர் நிரம்பிய குடங்களைத் தொங்கவிட்டு காவடி எடுக்கும் வழக்கம் இருந்துள்ளது.
சர்ப்பக் காவடி, பறவைக் காவடி, மிட்டாய் காவடி, அக்னிக் காவடி என்று இதில் பல்வேறு வகைகள் உண்டு. வெட்டிவேர் உடல் வெப்பத்தைத் தணித்தல், சளி, வாந்திபேதிக்கு சிறந்த மருந்து. மாவூத்து வேலப்பர் கோயில் பக்தர் பயன்படுத்திய காவடி இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.