கூடா நட்பு விவகாரம்:  பெண்ணைக் கொன்ற முதியவர் கைது :

கூடா நட்பு விவகாரம்: பெண்ணைக் கொன்ற முதியவர் கைது :

Published on

கடவூர் அருகே கூடா நட்பு விவகாரத்தில் பெண்ணைக் கொலை செய்த முதியவரை போலீஸார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம் கடவூர் அருகேயுள்ள சேவாப்பூரைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவரது மனைவி பழனியம்மாள் (55). அதே பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி என்கிற மணி (70). இருவருக்கும் இடையே கடந்த 30 ஆண்டுகளாக கூடா நட்பு இருந்துள்ளது.

கடந்த ஒரு மாதமாக ராமசாமியிடம் கோபித்துக்கொண்டு பழனியம்மாள் அவரிடம் பேசவில்லை இதனால் ஆத்திரமடைந்த ராமசாமி நேற்று அதிகாலை பழனியம்மாள் வீட்டுக்கு அரிவாளுடன் சென்று தூங்கிக் கொண்டிருந்த பழனியம்மாளை வெட்டியதில் பழனியம்மாள் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். ராமசாமியை பாலவிடுதி போலீஸார் கைது செய்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in