

திருப்பூர் மாநகரக் காவல் ஆணையர் வே.வனிதா உத்தரவின் பேரில், கொங்கு பிரதான சாலை அம்பேத்கர் காலனியில் வசிக்கும் அருந்ததியர் மற்றும் ஆதிதிராவிடர் மக்களுக்கு மாநகர காவல் துணை ஆணையர் அரவிந்தன் (சட்டம் மற்றும் ஒழுங்கு) சமுதாய விழிப்புணர்வு குறித்து நேற்று விளக்கினார்.
வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பான விழிப்புணர்வு, கரோனா தொற்று 3-ம் அலையை முன்னெச்சரிக்கையாக தடுப்பது குறித்து விளக்கினர். கரோனா விடுமுறையால் பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் குழந்தைகளுக்கு தேவையான நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டன.
வடக்கு சரக உதவி ஆணையர் வெற்றிவேந்தன், வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் கணேசன், உதவி ஆய்வாளர் கார்த்திக் உட்பட பலர் உடனிருந்தனர்.