கள்ளக்குறிச்சியில் - இளைஞர் உயிரிழப்பில் சந்தேகம்: உறவினர்கள் மறியல் :

கள்ளக்குறிச்சியில் -  இளைஞர் உயிரிழப்பில் சந்தேகம்: உறவினர்கள் மறியல் :
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டம் நிறைமதி கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சைப்பிள்ளை மகன் ஆனந்த்ராஜ் (24). இவர் இரு தினங்களுக்கு முன்பு கோமுகி ஆற்றங்கரையோரம் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இதையடுத்து வரஞ்சரம் போலீஸார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது பிச்சைப்பிள்ளை தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது நண்பர்களான பிரகாஷ் மற்றும் அபி ஆகியோரை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால் போலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆவேசமடைந்த அவரது உறவினர்கள், ஆனந்தராஜை கொலை செய்த அவரது நண்பர்களை கைது செய்யக் கோரி நிறைமதி பேருந்து நிறுத்தும் அருகே நேற்று திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர. தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in