நலத்திட்ட உதவி பெற விண்ணப்பிக்கலாம் :

நலத்திட்ட உதவி பெற விண்ணப்பிக்கலாம் :
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்தவர்களில் கரோனா இரண்டாம் அலையின்போது பாதிக்கப்பட்டு பலர் இறந்துள்ளனர். அவ்வாறு இறந்தவர்களின் குழந்தைகளின் வாழ்வாதாரம் கருதி அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கரோனாவால் தாய் அல்லது தந்தை அல்லது இருவரையுமே இழந்த குழந்தைகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்), மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், விருதுநகர் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in