Published : 03 Aug 2021 03:17 AM
Last Updated : 03 Aug 2021 03:17 AM

சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர் கருணாநிதி : தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புகழாரம்

சென்னை

தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழா நேற்று கோலாகலமாக நடந்தது. பேரவை அரங்கில் முன்னாள் முதல் வர் கருணாநிதியின் படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். விழாவுக்கு தலைமையேற்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசியதாவது:

தமிழக சட்டப்பேரவையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இந்த சட்டங்கள் அனைத்தும் தமிழகத்தை வளமான மாநிலமாக உருவாக்குவதற்கு வழிவகுத்தன.

இந்த சட்டப்பேரவை பல பெருந்தலைவர்களை கண்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு ஒரு பெரிய வரலாறு உண்டு. சமூக நீதி, தீண்டாமை ஒழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன், கல்வி, வறுமை ஒழிப்பு, மூன்றாம் பாலினத்தவர் உள்ளிட்ட விளிம்பு நிலையில் உள்ள மக்களின் நலன் போன்ற முன்னோடித் திட்டங்களும் இதில் அடங்கும். இவற்றில் பல திட்டங்கள் நம் நாட்டின் கொள்கைகள் மற்றும் திட்டப் பணிகளுக்கு அடித்தளமாக அமைந்துள்ளன.

முன்னாள் முதல்வர் கருணாநிதி, தன்னுடைய பேச்சுத் திறமையால் மக்களை ஈர்த்தார். 5 முறை தமிழகத்தின் முதல்வராக இருந்ததும், போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றதும் உண்மையில் குறிப்பிடத்தக்க சாதனையாகும். அவர் இறக்கும்வரை இந்த சபையின் உறுப்பினராக இருந்தார். பரந்த அறிவாற்றல் கொண்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய கருணாநிதி ஆற்றிய பணிகளை நாம் பாராட்ட வேண்டும்.

அவரின் புகழுக்கு ஆதாரமாகவும் அவரது பெருமைக்கு காரணமாகவும் திகழ்ந்தது தமிழ் மொழியின் மீது அவருக்கு இருந்த அளப்பரிய திறமையேயாகும். இது அவரது அரசியல் எதிரிகளையும்கூட வசப்படுத்தியது. ஏழை மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்துக்கான எண்ணற்ற அர்ப்பணிப்பு, அவரது சேவையை பறைசாற்றுகிறது. குறிப்பாக, சாதி பாகுபாட்டை ஒழிப்பதற்கான சமத்துவபுரம் போன்ற திட்டங்களை கூறலாம். இவற்றை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்.

அனைத்து குடியரசுத் தலைவர் கள், பிரதமர்கள், பல்வேறு மாநிலங் களின் முதல்வர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்களுடனும் நெருக்கமாக பழகியவர் கருணா நிதி. சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அவர் முன்மாதிரியாக திகழ்ந்தார். புதிதாக அமைக்கப்பட்ட 16-வது சட்டப்பேரவையின் உறுப்பினர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருக்கலாம். மாறுபட்ட அரசியல் சித்தாந்தங்களை சார்ந் தவர்களாக இருக்கலாம். இந்த நூற்றாண்டு விழா கொண்டாட்டத் தில், மக்களுக்கு சேவை செய் வதற்கும் மாநிலத்தின் முன்னேற்றத் துக்கும் ஒரு பொதுவான குறிக் கோளுடன் இணைந்து பாடுபடு மாறு நான் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். இந்த சட்டப்பேரவை இனிவரும் காலத்திலும் நம் தேசத்துக்கு முன்னோடியாகத் திகழட்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x