வீடு தீப்பற்றியதில் சான்றிதழ்கள் சேதம் :

வீடு தீப்பற்றியதில் சான்றிதழ்கள் சேதம் :

Published on

சிங்காரப்பேட்டை அருகே வீடு தீப்பிடித்து எரிந்ததில் சான்றிதழ் மற்றும் ஆவணங்கள் சேதமடைந்தன.

கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே உள்ள ஒந்தியம்புதூரைச் சேர்ந்தவர் மோகன்குமார் (23). இவர் தனது தாயார் வீட்டில் சமையல் பணியை முடித்து விட்டு அடுப்பை முறையாக அணைக்காமல் வெளியில் சென்றதாக கூறப்படுகிறது.

இதனால், அடுப்பில் இருந்து வீட்டுக்கு தீ பரவி வீடு தீப்பற்றி எரிந்தது. இதில், வீட்டில் இருந்த மோகன்குமாரின் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 சான்றிதழ்கள், சமையல் எரிவாயு இணைப்பு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்கள் எரிந்து சேதமடைந்தன. இது தொடர்பாக மோகன்குமார் அளித்த புகாரின்பேரில் சிங்காரப்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in