‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் -  திருப்பூர், உதகையில் 889 பயனாளிகளுக்குரூ.5.43 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் :

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் - திருப்பூர், உதகையில் 889 பயனாளிகளுக்குரூ.5.43 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் :

Published on

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் திருப்பூர், நீலகிரிமாவட்டங்களில் 889 பயனாளிகளுக்கு ரூ.5 கோடியே 43 லட்சம் மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டன.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டத்தில் 292 பயனாளிகளுக்கு ரூ.40 லட்சத்து 65 ஆயிரத்து406 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் சு.வினீத், அமைச்சர்கள் சு.முத்துசாமி (வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை), மு.பெ.சாமிநாதன்(செய்தித்துறை), என்.கயல்விழிசெல்வராஜ் (ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை)ஆகியோர் நேற்று வழங்கினர்.

அமைச்சர் மு.பெ.சாமிநாதன்பேசும்போது, "தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது. அதன்பின் ஒவ்வொரு துறைக்கும் மானிய கோரிக்கை நடைபெறும். நிதி ஒதுக்கீடு செய்து, மக்களுக்கான அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும்" என்றார்.

அமைச்சர் சு.முத்துசாமி பேசும்போது, "தேர்தல் அறிக்கையில், ஒவ்வொரு மாவட்டத்துக்கு அறிவித்த அனைத்து திட்டங்களையும், வளர்ச்சிக்கு தேவைப்படும் அனைத்து தொலைநோக்கு திட்டங்களையும் முதல்வர் நிறைவேற்று வார்" என்றார்.

இதேபோல, திருப்பூர் வடக்கு,தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில்,‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ், 388பயனாளிகளுக்கு ரூ.74 லட்சத்துஆயிரத்து 328 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. எம்எல்ஏ க.செல்வராஜ், கோட்டாட்சியர் ஜெகநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

உதகை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in