காஞ்சியில் கூட்டுறவு இணை பதிவாளர்கள் இட மாற்றம் :

காஞ்சியில் கூட்டுறவு  இணை பதிவாளர்கள் இட மாற்றம் :
Updated on
1 min read

காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை இணைப் பதிவாளர் கே. தேவிபிரியா மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இவருக்கு பதிலாக, பால் கூட்டுறவுகளின் தணிக்கைத் துறை இணைப் பதிவாளர் குமரேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் ஆர். கே. சந்திரசேகரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் இணைப் பதிவாளர் எஸ். லட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்.

பணி மாற்றம் செய்யப்பட்டுள்ள காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் இணைப் பதிவாளர், இதுவரை அளித்த உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in