

ரிஷிவந்தியம் அருகே கீழ்பாடியில் வசித்து வருபவர் அண்ணாமலை (70). இவரது மகன் அலெக்ஸ் பாண்டியன் (35). தந்தை - மகன் இடையே சொத்துத் தகராறு இருந்து வந்தது. இதனால் வீட்டில் அமைதியற்ற சூழல் நிலவியது. நேற்று முன்தினம் அலெக்ஸ் மது அருந்தி வந்து, தந்தையிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அண்ணாமலை தடியால் தாக்கியதில் அலெக்ஸ் சம்பவஇடத்திலேயே உயிரிழந்தார்.ரிஷிவந்தியம் காவல் நிலையத் தினர் அண்ணாமலையை கைது செய்தனர்.
உயிரிழந்த அலெக்ஸ்க்கு செல்வி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.