முன்னாள் அமைச்சர் - வே.தங்கபாண்டியன் நினைவு தினத்தில் திமுகவினர் அஞ்சலி :

மறைந்த முன்னாள் அமைச்சர் வே.தங்கபாண்டியன் நினைவிடத்தில்  அஞ்சலி செலுத்திய அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. உள்ளிட்டோர்.
மறைந்த முன்னாள் அமைச்சர் வே.தங்கபாண்டியன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. உள்ளிட்டோர்.
Updated on
1 min read

மறைந்த முன்னாள் அமைச்சர் வே.தங்கபாண்டியனின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் தந்தையும், முன்னாள் வணிகவரித்துறை அமைச்சருமான மறைந்த வே.தங்கபாண்டியனின் 24-ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி, விருதுநகர்அருகே மல்லாங்கிணறு கிராமத்தில் நடைபெற்றது.

மல்லாங்கிணறில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக வினர் மலரஞ்சலி செலுத்தினர்.

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், தென்சென்னை எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன், ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் ஆகியோர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

அதைத் தொடர்ந்து, திமுகவினர், கிராம மக்களும் அஞ்சலி செலுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in