

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி பல்நோக்கு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் 1,075 பேருக்கு ரூ.13.76 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாநில தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு தலைமை வகித்தார். பாளையங்கோட்டை எம்எல்ஏ மு. அப்துல்வகாப் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் 18 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள 1,075 தொழிலாளர்களுக்கு ரூ.13.76 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். தொழிலாளர் இணை ஆணையர் சி. ஹேமலதா, தொழிலாளர் உதவி ஆணையர் ஆனந்தன் மற்றும் தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.