

தூத்துக்குடி - தாளமுத்துநகர், தாளமுத்துநகர் - மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் - முள்ளக்காடு ஆகிய 3 புதிய வழித்தடங்களில், சாதாரணக் கட்டண நகரப்பேருந்துகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
புதிய பேருந்துகளை மக்களவை உறுப்பினர் கனிமொழி தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தலைமை வகித்தார். தொடர்ந்து, டி.எம்.பி. காலனி பகுதியில் ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார். முத்துநகர் கடற்கரை பகுதியில் 5,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, எம்எல்ஏ சண்முகையா, அரசு போக்குவரத்து கழக மண்டல மேலாண்மை இயக்குநர் ராஜேஸ்வரன், பொது மேலாளர் சரவணன், மாநகராட்சி தலைமை பொறியாளர் சேர்மக்கனி, நகர்நல அலுவலர் வித்யா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.