குறைந்த வாடகையில் வேளாண் கருவிகள் :

குறைந்த வாடகையில் வேளாண் கருவிகள் :
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தூத்துக்குடி மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் குறைந்த வாடகையில், மண் தள்ளும் இயந்திரங்கள், உழுவை இயந்திரங்கள் மற்றும் சக்கரவகை மண் அள்ளும் இயந்திரங்கள், ஜேசிபி, குழிதோண்டும் இயந்திரம், வைக்கோல் கட்டும் கருவி, சட்டிக் கலப்பை, சுழல் கலப்பை, கொத்துக் கலப்பை, தென்னை மரக்கிளைகளைத் துகளாக்கும் கருவி, வாழைமரத்தண்டு துகளாக்கும் கருவி, நிலக்கடலை பிடுங்கும் கருவி, விதைநடும் கருவி, சோளம் அறுவடை கருவி, கரும்பு மற்றும் காய்கனி நாற்று நடும் கருவி மற்றும் பல்வகைக் கதிரடிக்கும் இயந்திரங்கள் உள்ளன.

ஒருமணி நேரத்துக்கு உழுவை இயந்திரத்தால் இயங்கக் கூடிய அனைத்துக் கருவிகளுக்கும் ரூ. 340, மண் தள்ளும் இயந்திரம் ரூ. 840, சக்கரவகை மண் அள்ளும் இயந்திரம் மற்றும் ஜேசிபி இயந்திரம் ரூ. 660 என்ற குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு அளிக்கப்படுகிறது.

வேளாண் கருவிகள் வாடகைக்கு தேவைப்படுவோர் தூத்துக்குடி கோட்ட அலுவலக செயற்பொறியாளர்- 94431 72665, தூத்துக்குடி உதவி செயற்பொறியாளர்- 96557 08447, கோவில்பட்டி உதவி செயற்பொறியாளர்- 94432 76371, திருச்செந்தூர் உதவி செயற்பொறியாளர்- 94436 88032 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in