

திருப்பூர் மாவட்டம் முழுவதும் ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரியும்செவிலியர்களுக்கு, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கலந்தாய்வு நடைபெற்று வந்தது.
கடந்த 26-ம் தேதி முதல் அரசுஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரியும் செவிலியர்களுக்கு பணியிட மாறுதலுக்கானகவுன்சிலிங்கில் பங்கேற்றவர்கள்மாநிலத்தின் எந்த இடத்துக்கும் இடமாற்றம் ஆகலாம். மருத்துவ சேவை அலுவலகத்தின் இணை இயக்குநர் அலுவலகத்தில் நேற்று 58 பேர் பங்கேற்றனர்.
கடந்த 5 நாட்களில் 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில், கலந்தாய்வு நேற்றுடன் நிறைவடைந்தது.