

அவிநாசி அருகே ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் பிரகாஷ் (33). பனியன் தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு மனைவி வேலைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில்உறங்கிக் கொண்டிருந்த தனது 11 வயது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். நேற்றுகாலை வீடு திரும்பிய தாயிடம் நடந்ததை மகள் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அளித்த புகாரின் பேரில், போக்ஸோ (பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல்) சட்டத்தின் கீழ் அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சரஸ்வதி வழக்கு பதிந்து, பிரகாஷை கைது செய்தார்.