சிறுமிக்கு பாலியல் தொல்லை - உடந்தையாக இருந்த தாயார் உட்பட இருவர் கைது :

சிறுமிக்கு பாலியல் தொல்லை -  உடந்தையாக இருந்த  தாயார் உட்பட இருவர் கைது :
Updated on
1 min read

திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த 45 வயது பெண், தனது கணவர் இறந்து விட்டதால் தனது 3 மகள்கள், ஒரு மகனுடன் வறுமையில் சிரமப்பட்டார். இந்நிலையில் தனது 10 வயது மகளை அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் அக்பர்அலி (66) என்பவரது வீட்டில் தங்கி படிக்க அனுப்பினார். அங்கு அக்பர்அலி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் சிறுமி மீண்டும் தாயார் வீட்டுக்கு வந்தார். அதன்பிறகு தாயார் உடந்தையுடன் திருச்சி ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த சரவணன் (30), பட்டுக்கோட்டையைச் சேர்ந்த முருகேசன் (40) ஆகியோர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து சிறுமி தனது உறவினர் ஒருவர் மூலம் குழந்தைகள் நலக் குழுவிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து மாவட்ட குழந்தைகள் நல குழுத் தலைவர் சரளா விசாரணை நடத்தினார். விசாரணையில் சம்பவங்கள் அனைத்தும் உண்மையென தெரியவந்ததை அடுத்து சரளா திருப்பத்தூர் மகளிர் போலீஸாரிடம் புகார் கொடுத்தார்.

அக்பர்அலி, சரவணன், முருகேசன் மற்றும் உடந்தையாக இருந்த சிறுமியின் தாயார் ஆகிய 4 பேர் மீது இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிந்து அக்பர்அலி, அச்சிறுமியின் தாயார் ஆகியோரை கைது செய்தார்.

தற்போது சிறுமிக்கு 16 வயதாகிறது. மேலும் அந்த சிறுமி குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in