கிருஷ்ணகிரியில் கற்போம் எழுதுவோம் இயக்கம் மூலம் மதிப்பீட்டு முகாம் :

கிருஷ்ணகிரி கிட்டம்பட்டி தொடக்கப்பள்ளியில் கற்போம், எழுதுவோம் மதிப்பீட்டு முகாமினை மாவட்ட கல்வி அலுவலர் கலாவதி ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி கிட்டம்பட்டி தொடக்கப்பள்ளியில் கற்போம், எழுதுவோம் மதிப்பீட்டு முகாமினை மாவட்ட கல்வி அலுவலர் கலாவதி ஆய்வு செய்தார்.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கற்போம் எழுதுவோம் இயக்கத்தின் மூலம், 18 வயதிற்கு மேல், 80 வயதிற்குள் இருக்கும் எழுத்தறிவு இல்லாதவர்களைக் கண்டறிந்து, தன்னார்வலர்கள் மூலம், 9 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இவர்களுக்கான மதிப்பீடு தற்போது நடந்து வருகிறது. கற்றல் அடைவுகளில் கற்போருக்கு கடந்த 29-ம் தேதி முதல் இன்று வரை 3 நாட்கள் மதிப்பீடு முகாம் நடத்தப்பட்டது. அதன்படி, கிருஷ்ணகிரி வட்டாரத்தில் 33 மையங்களில் 653 கற்போர், சமூக இடைவெளி மற்றும் அரசின் கரோனா வழிகாட்டுதலை பின்பற்றி மதிப்பீட்டு தேர்வு நடைபெற்றது.

கிருஷ்ணகிரி அருகில் உள்ள கிட்டம்பட்டி தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற கற்போம் எழுதுவோம் மதிப்பீட்டு மையத்தை, மாவட்ட கல்வி அலுவலர் கலாவதி, நேற்று பார்வையிட்டார். இதில், ஆசிரியர் பயிற்றுனர் சண்முகம், மைய மேற்பார்வையாளர் சாந்தி, கண்காணிப்பாளர் ரஞ்சிதா, பயிற்சி மாவட்டக் கல்வி அலுவலர் -முனிராஜ், பள்ளித் துணை ஆய்வாளர் ஜெயராமன், சுதாகர், வட்டார வளமைய மேற்பார்வையாளர்- கோதண்டபாணி ஆகியோர் உடன் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in