

சுங்கத்துறை கண்காணிப்பாளர் வீட்டில் பூட்டை உடைத்து 70 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி பிரையண்ட் நகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் (56). இவர்,தூத்துக்குடி சுங்கத்துறை அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். வெளியூர்சென்றிருந்த இவர், நேற்று காலை வீட்டுக்கு வந்தபோது முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த 70 பவுன் தங்க நகைகள் திருட்டுபோயிருந்தன. வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவின் மானிட்டரையும் காணவில்லை.
எஸ்பி எஸ்.ஜெயக்குமார் விசாரணை நடத்தினார். தென்பாகம் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். கைரேகை நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.