

மாணவர்களுக்கு சர்வதேச வேலைவாய்ப்பை பெற்றுத்தரும் நோக்கத்தோடு, சிங்கப்பூரைச் சேர்ந்த போஸ்டோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துடன், தூத்துக்குடி வஉசி கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் நிலத்தியல் துறை மாணவர்கள் முகம்மது இம்ரான், மாரிமுத்து ஆகிய இருவரும், அந்நிறுவனத்தில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இருவருக்கும் பணிநியமன கடிதங்களை கல்லூரி முதல்வர் சொ.வீரபாகு வழங்கினார். கல்லூரி வேலைவாய்ப்பு குழு உறுப்பினர்கள், நிலத்தியல் துறைத் தலைவர் மற்றும் ஆசிரியர்களை, கல்லூரி முதல்வர் பாராட்டினார்.