

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரோனா ஊரடங்கில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் திரளாக வணிக மையங்களுக்கு வந்ந வண்ணம் உள்ளனர். உணவுப் பொருட்கள் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், விற்பனை யாளர்கள், ஓட்டல்கள், டீக்கடை கள், டிபார்ட்மென்டல் ஸ்டோர், தெருவோர வணிகர்கள், விழாக்கால விற்பனையாளர்கள் உள்ளிட்ட உணவு வணிகர்களில் 2,177 வணிகர்கள் உணவு பாதுகாப்பு உரிமமும், 15,351 வணிகர்கள் உணவு பாதுகாப்புச் சான்றிதழும் பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு, கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அனைத்து உணவு வணிக நிறுவன உரிமையாளர்களும் பணியாளர்களும் கரோனா நோய்க்கு எதிராக அரசு இலவசமாக வழங்கும் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு, நோய் பரவுதலைக் கட்டுப் படுத்த உதவ வேண்டும். தவறும்பட்சத்தில் உணவு வணிக நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.